-
வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!
-
உண்மையில், தேவன் அநேகரை அழைத்துள்ளார். இப்புவியில் நம் வாழ்வு தேவனுக்குச் சேவை செய்ய கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். நீங்கள் அவர் இராஜ்யத்திற்காய் செய்யும் உங்கள் வேலைகளை அவர் கண்ணோக்கிப் பார்க்கிறார். இந்த புத்தகம் உங்களை வாசிக்கத் தூண்டும் ஒரு புத்தகமாகும். இந்த புத்தகத்தை எழுதியவரின் கருத்துக்களை நீங்கள் கவனமாக உட்கொண்டால், உங்கள் வாழ்வின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் ஞானம் பெறுவீர்கள்.
-
நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண, தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் முப்பது வருடங்களாக மேய்ப்பரின் அனுபவத்திலுள்ளார். எனவே, அவர் தனது ஊழிய பணியிலுள்ள நடைமுறை நுண்ணறிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் தேவ ஜனங்களின் மேய்ப்பனாக மாற வாஞ்சையுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழிகாட்டும் புத்தகம் இதுவாயிருக்கிறது.
-
பலவித ஆபத்துக்கள், கண்ணிகள் மற்றும் பொறிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களை வேதனைப்படுத்த, காயப்படுத்த மற்றும் அழிக்க விரித்துள்ள தந்திரம் நிறைந்த அநேக ஆபத்துக்களை காண இப்புத்தகம் உங்கள் கண்களை திறக்கும். உங்களுக்கு உதவியாக இருக்க, “ஆவிக்குரிய ஆபத்துக்கள்” என்னும் இந்த ஆற்றல் மிக்க புத்தகத்தை வாசித்து உங்களை நீங்கள் விடுவித்து இரட்சித்துக்கொள்ளுங்கள்!
-
பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என்பதையும் இயேசுவின் இரத்தம் தன் முக்கியத்துவத்தை எவ்வாறு அடைந்தது என்பதையும் நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடையேயுள்ள உரையாடலையும் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வல்லமை உண்டு.
-
போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள வல்லமையை அழிக்க இயலாது.
-
“ஒரு வேளை, நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் எதிரி ‘சகோதரர்கள் மத்தியில் வாசம் செய்துக்கொண்டு குற்றஞ்சாட்டுகிறவன்’ ஆக இருக்கக்கூடும்.” டேக் ஹெவர்ட் மில்ஸ் எழுதியுள்ள இந்த கலைச்சிறந்த புத்தகத்தை வாசிக்கையில், உங்களுக்கு விரோதமாக உபயோகிக்கும் குற்றஞ்சாட்டு என்னும் ஆயுதத்தை மேற்கொள்ளும் மாபெரும் உட்பார்வையை அடைவீர்கள்.
-
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த
-
இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.