-
“ஒரு வேளை, நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் எதிரி ‘சகோதரர்கள் மத்தியில் வாசம் செய்துக்கொண்டு குற்றஞ்சாட்டுகிறவன்’ ஆக இருக்கக்கூடும்.” டேக் ஹெவர்ட் மில்ஸ் எழுதியுள்ள இந்த கலைச்சிறந்த புத்தகத்தை வாசிக்கையில், உங்களுக்கு விரோதமாக உபயோகிக்கும் குற்றஞ்சாட்டு என்னும் ஆயுதத்தை மேற்கொள்ளும் மாபெரும் உட்பார்வையை அடைவீர்கள்.
-
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த
-
இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.
-
தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.
-
செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
-
இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.
-
கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இத்தனிச்சிறந்த புத்தகம், தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடக்க மற்றும் உங்களை நீங்கள் முழுமையாக கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க சவால் விடுத்து வழிநடத்தும்.
-
“நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.
-
குமாரத்திகள் படும் வேதனைகளை இந்த புத்தகம் ஆற்றும்! நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற இந்த புத்தகம், பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பல்வேறு கூடாத சூழ்நிலைகளை மேற்கொள்ள தேவ ஞானத்தை உதவியாக அடைவதற்கு ஏதுவாயிருக்கும். விசேஷமாக குமாரத்திகளுக்கு எழுதப்பட்ட ஆற்றல்வாய்ந்த இந்த புதிய புத்தகத்தை வாசித்து அனுபவிக்கையில் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தித்து பெலப்படுத்துவாராக.
-
தேவனுடைய பரிபூரண சித்தத்தின் மத்தியில் காணப்படுவது என்னும் பொருளைப்பார்க்கிலும் வேறொரு முக்கிய பொருளில்லை. சுவிசேஷ ஊழியர்களை மேம்படுத்திக்காட்டும் ஒரு முக்கியமான காரியம் என்னவெனில் அவர்கள் துல்லியமாக தேவ சத்தத்தை கேட்கும் திறனில் அடங்கியுள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்பட பரிசுத்த ஆவியானவரை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானதாகும். நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்படும்பொழுது தேவனுக்காக வாஞ்சிப்பவைகளை எல்லாம் அடைந்து அதில் தழைத்தோங்குவீர்கள். டேக் ஹெவர்ட் மில்ஸின் தனிச்சிறப்பு வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள பணி உங்கள் ஊழியம் மற்றும் வாழ்க்கையில் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.