• சபை நிறுவுதல் என்கிற கோட்பாடு, சபைத் தலைவர்கள் எல்லாராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆரம்ப கால சீஷர்களின் மிக முக்கியமான நடவடிக்கை அதுவாகத்தானிருந்தது. வெற்றிகரமான சபை நிறுவுதல் என்பது, நல்ல திறமையும் மற்றும் பல்வேறு தரப்பட்ட காரணிகளையும் தழுவி நிற்பதேயாகும். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் ஒரு எழுப்புதல் நிறைந்த சபையின் ஸ்தாபகர், உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து அதை ஆராய்ந்து சபை நிறுவுதலின் வெவ்வேறு அம்சங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சபை நிறுவுதலை தன் வாழ்வின் தரிசனமாக கொண்டுள்ள எந்த ஒரு ஊழியனுக்கும் பயிற்றுவிக்கதக்க நல்ல நடைமுறைப் பயிற்றுவிப்பு நூல்.

  • பூர்வீக பழக்கமாகிய தசம பாகம் செலுத்துதல், யூதர்களின் பாரம்பரிய சொத்து குவித்தலுக்கு காரணமாயிருப்பதின் பொருளை அறிந்துக்கொள்ள மக்கள் இன்றும் தவிக்கின்றனர். இப்புத்தகத்தில் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் அற்புதமான செழிப்பு மற்றும் சொத்தை உண்டாக்குவதின் கோட்பாடுகளை தசம பாகத்தின் வாயிலாக எவ்வாறு உருவாக்குவதென்பதை கற்பிக்கின்றார். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக எழுதிய உயர்தரமான இந்நூலை வாசித்து மகிழுங்கள்.

  • ஊழியத்தின் அழைப்பு என்பது தலைவர்களாக இருக்கவே அழைக்கப்படுவதாகும். டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் அவர்கள், தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைவராக மாற்றிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறார். இவ்விடத்தில் வெளிப்பட்டுள்ள சத்தியங்கள், அநேக சபை தலைவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்தி தரைமட்டும் தாழ்த்தும் அணுகுமுறையை தவிர்க்க செய்து தலைமைத்துவம் என்னும் கலை திறனை அடைய ஊக்குவிக்கும்.

  • திருச்சபை வளர்ச்சி அடைவது மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும் எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.

  • “...நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும்,  சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார்.  கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி”  ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில்  உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”

  • இயேசு கிறிஸ்துவின் வாயிலாக உண்டாகும் இரட்சிப்பை புரிந்துக்கொள்ள இப்புத்தகம் இறுதி வழிகாட்டியாக உள்ளது. இத்தலைச்சிறந்த புத்தகத்தில் இயேசு உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார், எவ்வாறு நீங்கள் மீண்டும் பிறக்க இயலும், எவ்வாறு நீங்கள் நரகத்திற்கு செல்வதை தவிர்க்க முடியும் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருப்பதின் பொருள் என்ன என்பதை நன்கு புரிந்துக்கொள்வீர்கள். யாவருக்கேனும் இப்புத்தகத்தை அருளலாம், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பின் பொருளை எளிதாக விளங்கிக்கொள்வார்கள்.

  • பலவித ஆபத்துக்கள், கண்ணிகள் மற்றும் பொறிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களை வேதனைப்படுத்த, காயப்படுத்த மற்றும் அழிக்க விரித்துள்ள தந்திரம் நிறைந்த அநேக ஆபத்துக்களை காண இப்புத்தகம் உங்கள் கண்களை திறக்கும். உங்களுக்கு உதவியாக இருக்க, “ஆவிக்குரிய ஆபத்துக்கள்” என்னும் இந்த ஆற்றல் மிக்க புத்தகத்தை வாசித்து உங்களை நீங்கள் விடுவித்து இரட்சித்துக்கொள்ளுங்கள்!

  • பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம் சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும் வேதனைப்படுவான். மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குழப்பம் ஊழியர்களுக்கு விரோதமாக போராடும் தீய ஆவிகள். அநேக வேளைகளில் தங்களுக்கு விரோதமாக போராடுவதின்னதென்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள். உட்போராட்டத்தை நடத்தும் சத்துருவை கண்டுபிடித்து அவனை எதிர்த்து நிற்க்க இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்

  • டேக் ஹெவர்ட்- மில்ஸ் அவர்களால், பிசாசுகளின் கிரியை இப்புத்தகத்தில் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளaது. லேகியோன் என்ற ஒரு கூட்ட பிசாசுகள் பிடித்த கதரேனா நாட்டு வாலிபனின் அனுபவத்திலிருந்து பிசாசுகளையும், அசுத்த ஆவிகளையும் எப்படி மேற்கொள்வது என்று இவர் விளக்குகிறார்

  • தேவனை பின்பற்றுதல் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கக்கூடிய கண்டுபிடிப்பின் பயணமாகும். இதர மக்களை பின்பற்றி அவர்களை நகல் எடுப்பது இயேசு கிறிஸ்து பயிற்சியளிக்க தெரிந்தெடுத்த அவருடைய பூர்வீக கலை திறன் கோட்பாட்டின் முறையாகும். காலப்போக்கில் சோதித்தறியப்பட்ட பயிற்சியின் முறைகளுக்கு நாம் வெட்கி விலகிபோகாமல் பின்பற்றும் கலை திறனின் தாழ்மை மற்றும் அதின் அழகை புரிந்துக்கொள்ளும் வேளை இதுவாகவே உள்ளது. எவ்வாறு மற்றும் எப்படி சீராக பின்பற்ற வேண்டும் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறிந்துக்கொள்வீர்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்பற்றும் கலைதிறனை நேர்த்தியான இடத்தில் இந்த நவீன புத்தகத்தில் மிக்க அறிவுடன் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.

  • இப்புத்தகத்தின் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், பின்மாற்றம் கிறிஸ்தவர்களில் நேரிடும் ஒரு சாதாரணமானதொன்றாகும். அநேகர் நன்கு ஆரம்பிக்கிறனர், ஆனால் இறுதிவரை தொடர்ந்து நிலைநிற்பதில்லை. இப்புத்தகத்தில், பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் எச்சரிக்கும் ஒலியை எழுப்புகின்றார் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரலோகத்திற்கு வெற்றிகரமாக செல்லும் வழியை வரைகலையுடன் காண்பித்துள்ளார்!

  • நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.

Title

Go to Top