• தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.

  • செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

  • இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.

  • கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இத்தனிச்சிறந்த புத்தகம், தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடக்க மற்றும் உங்களை நீங்கள் முழுமையாக கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க சவால் விடுத்து வழிநடத்தும்.

  • “நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.

  • குமாரத்திகள் படும் வேதனைகளை இந்த புத்தகம் ஆற்றும்! நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற இந்த புத்தகம், பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பல்வேறு கூடாத சூழ்நிலைகளை மேற்கொள்ள தேவ ஞானத்தை உதவியாக அடைவதற்கு ஏதுவாயிருக்கும். விசேஷமாக குமாரத்திகளுக்கு எழுதப்பட்ட ஆற்றல்வாய்ந்த இந்த புதிய புத்தகத்தை வாசித்து அனுபவிக்கையில் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தித்து பெலப்படுத்துவாராக.

  • தேவனுடைய பரிபூரண சித்தத்தின் மத்தியில் காணப்படுவது என்னும் பொருளைப்பார்க்கிலும் வேறொரு முக்கிய பொருளில்லை. சுவிசேஷ ஊழியர்களை மேம்படுத்திக்காட்டும் ஒரு முக்கியமான காரியம் என்னவெனில் அவர்கள் துல்லியமாக தேவ சத்தத்தை கேட்கும் திறனில் அடங்கியுள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்பட பரிசுத்த ஆவியானவரை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானதாகும். நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்படும்பொழுது தேவனுக்காக வாஞ்சிப்பவைகளை எல்லாம் அடைந்து அதில் தழைத்தோங்குவீர்கள். டேக் ஹெவர்ட் மில்ஸின் தனிச்சிறப்பு வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள பணி உங்கள் ஊழியம் மற்றும் வாழ்க்கையில் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.

  • சபை நிறுவுதல் என்கிற கோட்பாடு, சபைத் தலைவர்கள் எல்லாராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆரம்ப கால சீஷர்களின் மிக முக்கியமான நடவடிக்கை அதுவாகத்தானிருந்தது. வெற்றிகரமான சபை நிறுவுதல் என்பது, நல்ல திறமையும் மற்றும் பல்வேறு தரப்பட்ட காரணிகளையும் தழுவி நிற்பதேயாகும். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் ஒரு எழுப்புதல் நிறைந்த சபையின் ஸ்தாபகர், உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து அதை ஆராய்ந்து சபை நிறுவுதலின் வெவ்வேறு அம்சங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சபை நிறுவுதலை தன் வாழ்வின் தரிசனமாக கொண்டுள்ள எந்த ஒரு ஊழியனுக்கும் பயிற்றுவிக்கதக்க நல்ல நடைமுறைப் பயிற்றுவிப்பு நூல்.

  • பூர்வீக பழக்கமாகிய தசம பாகம் செலுத்துதல், யூதர்களின் பாரம்பரிய சொத்து குவித்தலுக்கு காரணமாயிருப்பதின் பொருளை அறிந்துக்கொள்ள மக்கள் இன்றும் தவிக்கின்றனர். இப்புத்தகத்தில் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் அற்புதமான செழிப்பு மற்றும் சொத்தை உண்டாக்குவதின் கோட்பாடுகளை தசம பாகத்தின் வாயிலாக எவ்வாறு உருவாக்குவதென்பதை கற்பிக்கின்றார். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக எழுதிய உயர்தரமான இந்நூலை வாசித்து மகிழுங்கள்.

  • ஊழியத்தின் அழைப்பு என்பது தலைவர்களாக இருக்கவே அழைக்கப்படுவதாகும். டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் அவர்கள், தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைவராக மாற்றிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறார். இவ்விடத்தில் வெளிப்பட்டுள்ள சத்தியங்கள், அநேக சபை தலைவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்தி தரைமட்டும் தாழ்த்தும் அணுகுமுறையை தவிர்க்க செய்து தலைமைத்துவம் என்னும் கலை திறனை அடைய ஊக்குவிக்கும்.

  • திருச்சபை வளர்ச்சி அடைவது மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும் எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.

  • “...நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும்,  சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார்.  கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி”  ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில்  உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”

Title

Go to Top