-
பாசங்கத்தில் பூரண தேர்வு பெற்று உண்மையற்ற தன்மையில் சிறந்து விளங்கும் மக்களால் சபைகள் நிரம்பியுள்ளன. எப்பொழுதும் வஞ்சனை மற்றும் பாசாங்கம் சாத்தானின் மிக முக்கிய திறவுகோலாக காணப்பட்டுகொண்டே இருந்தது. பாசாங்கத்தின் முகமுடியை காணாத ஒரு தலைவன் தன் குருட்டாட்டத்தினிமித்தம் மிகவும் வேதனைப்படுவான். மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குழப்பம் ஊழியர்களுக்கு விரோதமாக போராடும் தீய ஆவிகள். அநேக வேளைகளில் தங்களுக்கு விரோதமாக போராடுவதின்னதென்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள். உட்போராட்டத்தை நடத்தும் சத்துருவை கண்டுபிடித்து அவனை எதிர்த்து நிற்க்க இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்
-
நீங்கள் அபிஷேகத்தை வாஞ்சிக்கிறீர்களா? இந்த வரலாற்று புத்தகத்தில், டாக்டர். ஹெவர்ட்- மில்ஸ் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு படிகளை பகிர்ந்துள்ளார். இப்புத்தகம் நிச்சயமாக உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருக்க தேவையான படிகளை கண்டுப்பிடிப்பது மிக அவசியமாகும்!
-
ஒரு கிறிஸ்தவனாக, உன் வாழ்க்கையில் சிறந்த மற்றும் இனிமையான செல்வாக்கு பரிசுத்த ஆவியானவராக இருக்க வேண்டும். உங்கள் சுபாவம், உங்கள் மனசாட்சி, உங்கள் படைப்பாற்றலின் தன்மை மற்றும் நீங்கள் பரிசுத்தமாக வாழும் திறன் பரிசுத்த ஆவியானவரால் செல்வாக்கிற்குட்படுத்தபடுவதை இப்புத்தகம் கற்பிக்கின்றது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த அதிசயமான புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பயில வேண்டியதென்னவெனில், பரிசுத்த ஆவியானவருடைய செல்வாக்கிற்கு, ஏவுதல்களுக்கு, விளைவுகளுக்கு மற்றும் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கு உங்களை முற்றிலும் ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதேயாகும்.
-
வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!
-
சபை நிறுவுதல் என்கிற கோட்பாடு, சபைத் தலைவர்கள் எல்லாராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆரம்ப கால சீஷர்களின் மிக முக்கியமான நடவடிக்கை அதுவாகத்தானிருந்தது. வெற்றிகரமான சபை நிறுவுதல் என்பது, நல்ல திறமையும் மற்றும் பல்வேறு தரப்பட்ட காரணிகளையும் தழுவி நிற்பதேயாகும். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் ஒரு எழுப்புதல் நிறைந்த சபையின் ஸ்தாபகர், உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட கிளை சபைகளை ஸ்தாபித்து அதை ஆராய்ந்து சபை நிறுவுதலின் வெவ்வேறு அம்சங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சபை நிறுவுதலை தன் வாழ்வின் தரிசனமாக கொண்டுள்ள எந்த ஒரு ஊழியனுக்கும் பயிற்றுவிக்கதக்க நல்ல நடைமுறைப் பயிற்றுவிப்பு நூல்.
-
திருச்சபை வளர்ச்சி அடைவது மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும் எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.
-
“...நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும், சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார். கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி” ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில் உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”
-
இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.
-
நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.
-
போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள வல்லமையை அழிக்க இயலாது.